PROGRAMME DETAILS

கவிதைகளின் அடிநாதம்: இசையின் கவித்துவம்

SWF Stage

Performances

DATE / TIME

3 Nov, Fri 8:00 PM - 10:00 PM
120mins

VENUE

The Arts House, Play Den
View on map

TICKETED EVENT

S$10

LANGUAGE

இந்த நிகழ்ச்சி தமிழில் இடம்பெறும்
This session is in Tamil

DESCRIPTION

நவீன இசையும் பொருள் செறிவான கவிதையும் சங்கமிக்கும் நிகழ்ச்சி இது. சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைகளுக்கு இளம் இசைக்குழுக்களான ராகாஜாஸ், பாக்ஸ்​சைல்ட் இரண்டும் இசை கூட்டியுள்ள அழகை ரசியுங்கள். இந்திய கர்நாடக  இசையை ஜாஸ் இசையுடன் கலப்பதில் பெயர் பெற்றது ராகாஜாஸ். வளர்ந்து வரும் பாக்ஸ்சைல்ட் குழு ராக் இசையில் கவனம் செலுத்துகிறது.

ஆங்கிலத்திலும் தமிழிலும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தமிழ் முரசுடன் இணைந்து படைக்கப்படுகிறது. 

 

Lyrical Roots: The Poetry of Music

It’s a cross-disciplinary dream with music and poetry. Witness the beauty of Singaporean Tamil verse as interpreted by two young pop-rock bands, Raghajazz and boxchild.

This session is in Tamil and English, and is a co-presentation with Tamil Murasu.
 

FEATURING

boxchild

Singapore

நம்பிக்கைப் புரட்சியைத் தொடங்க நினைக்கும் நால்வர் அடங்கிய ராக் இசைக்குழு பாக்ஸ்சைல்ட். கித்தார் கருவியில் அழுத்தமான ராக் இசையும் வலுவான குரல்களும் இணைந்த இக்குழு, இசை கேட்க விரும்புவோரின் மனங்களைத் தொட முயல்கிறது. 2013ல் உருவான பாக்ஸ்சைல்ட், நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி பாடல் இயற்றும் சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்டது. ஜீவன் குலரத்னத்தின் தலைமையில், நிக்கலஸ் சாங் கித்தாரையும் சின் ஷே பேஸ் கித்தாரையும் கென்னத் ரால்ஃப் சோர் ட்ரம்சையும் வாசிக்கின்றனர்.   

boxchild is a rock quartet with the mission of starting a revolution of hope. Promising in-your-face, guitar-driven heavy rock music with powerful melodic vocals, the band seeks to reach out and touch the lives of those who listen.

Formed in 2013, the band is composed of ex-members of the Ngee Ann Polytechnic Song Composing Club. Fronted by Jeevan Kularetnam, Nicholas Chang razes the soundscape with his incendiary Guitar play, Xin Zhe demonstrates the power of minimalism on Bass and Kenneth Ralph Sore serves as the engine to the relentless machine on Drums.

Taking influence from both American and Japanese post-hardcore artistes, boxchild will not stop in their quest to find the sound of hope.

ஐவர் அடங்கிய ராகாஜேஸ் குழுவினர் லாசால் கலைக் கல்லூரியில் ஜேஸ் இசையில் இளங்கலைப் படிப்பு படித்தபோது ஒன்றாக சேர்ந்து இசைக்கத் தொடங்கினர். எஸ்பிளனாடின் ஆசிய விழா 2009ல் முதன்முதலில் வாசித்த அவர்கள், மோ​சேய்க் ஜே​ஸ் விழா, பிரைட் யாங் திங்ஸ், ஜேஸ் இன் ஜூலை ​போன்ற சிங்கப்பூரின் பெரிய ஜேஸ் விழாக்களில் வழக்கமாகத் தோன்றத் தொடங்கினர். அவர்களது முதல் இசைத் தொகுப்பான இடியம்ஸ் ஆஃப் ஃபி​ரீடம் 2018ல் வெளியிடப்படும். 

The quintet of RaghaJazz began playing together during their undergraduate jazz music studies at LaSalle College of the Arts. Since their debut at the Esplanade’s Asian Vibes Festival in 2009, they have been a regular feature at some of Singapore’s biggest jazz initiatives including Mosaic Festival of Jazz, Bright Young Things and Jazz in July. Their first album Idioms of Freedom will be launched in 2018.