PROGRAMME DETAILS

புதுமைதாசன் புகழ்: உலக இலக்கியத்தை சிங்கப்பூர்த் தமிழர்களிடம் சேர்த்த பி கிருஷ்ணன்

புதுமைதாசன் புகழ்: உலக இலக்கியத்தை சிங்கப்பூர்த் தமிழர்களிடம் சேர்த்த பி கிருஷ்ணன்

Others

DATE / TIME

3 Nov, Sun 11:30 AM - 1:00 PM
90mins

VENUE

The Arts House, Gallery ll
View on map

Festival Pass Event

S$25

LANGUAGE

இந்த நிகழ்ச்சி தமிழில் இடம்பெறும்
This session is in Tamil

MODERATED BY

Kiruthika கிருத்திகா

DESCRIPTION

கலாசாரப் பதக்கம் பெற்ற, புதுமைதாசன் எனப்படும் பி கிருஷ்ணனின் ‘உலகப் பெருங்கதைகள்’ வானொலி நாடகங்களும் அவரது மொழிபெயர்ப்பு நாடகங்களும் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்துக்கு  உலக இலக்கியச் சாளரமாய் அமைந்தன. புதுமைதாசனின் முன்னைய மற்றும் புதிய  மொழிபெயர்ப்புகளின் மேடைவாசிப்பும் அவரது  மொழிபெயர்ப்புகளின் தாக்கம் பற்றிய கலந்துரையாடலும் இந்நிகழ்வில் இடம்பெறுகின்றன.

தமிழில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்துடன் இணைந்து படைக்கப்படுகிறது.  


The Role of P Krishnan in Bringing World Literature to the Singapore Tamil community

Cultural Medallion recipient P Krishnan's radio adaptations of world literary classics were a window into global literature to Tamils in newly-independent Singapore. SWF celebrates the translator in P Krishnan through selected readings of his published and unpublished Shakespearean dramas, and a discussion on the impact of his work on Tamil society.

This session is co-presented with the Association of Singapore Tamil Writers.

FEATURING

வடி PVSS எனும் வடிவழகன் மேடைநாடக, வானொலி, தொலைக்காட்சித் தளங்களில் செயல்பட்டு வரும் விருதுபெற்ற  படைப்பாளி, இயக்குனர், நடிகர். ஸ்ட்ரேட்ஸ் டைம்ஸ் நாளிதழ் 21ஆம் றூற்றாண்டின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராக அவரைக் குறிப்பிட்டுள்ளது. சட்டத் துறை வல்லுநரான வடிவழகன், ஆஸ்திரேலியாவில் புத்தாக்கத்தொழில் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்ற தேசிய கலை மன்றத்தின் உதவிநிதியை 2004இல் பெற்றார்.

Vadivalagan or Vadi PVSS, is an award-winning bilingual writer, director and performer of the stage, radio and television whom the Straits Times named as belonging to club of creators for the 21st century. Vadivalagan, who works in the legal sector, received an NAC Arts Bursary in 2004 to pursue a Masters in Creative Industries in Australia.

பொறியியல் பயின்ற அருள் ஓஸ்வின், தேசிய பல்கலையின் தமிழ்ப் பேரவையில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். தமிழ் கலைகள், இலக்கியம் மீது பேரார்வம் கொண்டவர். விவாதங்கள், இலக்கியப் பட்டிமன்றங்களில் கலந்துகொள்ளும் அருள், தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

An engineer by training, Arul has been passionate about the Tamil arts and literary scene in Singapore since his days in the NUS Tamil Language Society. Arul also actively take parts in community and literary debates and champions for the upliftment of the Tamil community in Singapore.

தேசிய பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் அஸ்வினி செல்வராஜ், தமிழில் சிறுகதைகள், நாடகங்களை எழுதி வருகிறார்.  அவர் பரிசுபெற்ற இளங்கவிஞமாவார்.  அஸ்வினி 2015ல் பிரதமரின் புத்தகப் பரிசையும் 2018இல் தொடர்பு தகவல் அமைச்சின் மொழிபெயர்ப்பு உபகாரச் சம்பளத்தையும் பெற்றுளளார். வளர்தமிழ் இயக்கத்தின் உறுப்பினராய் அவர் செயலாற்றி வருகிறார்.

Ashwinii Selvaraj is a prize-winning young Tamil poet, a playwright and a writer of short fiction. A Political Science student in NUS, Ashwinii received the Prime Minister's Book Prize in 2015 and the MCI Translation Scholarship in 2018. She currently sits on the Tamil Language Council.

தேசிய பல்கலைக்கழகத்தில் இரசாயனப் பொறியியல் பயிலும் அர்ஷத், வளர்ந்து வரும் தமிழ்ப் பட்டிமன்ற பேச்சாளர். பள்ளிப்பருவத்தில் வென்ற பரிசுகள், தமிழ்மொழியை ஆழ்ந்து கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை இவரிடம் தூண்டியது. மாணவர் தொண்டூழியரான அர்ஷத், சமூக அமைப்புகளுடன் அணுக்கமாக செயல்பட்டு வருகிறார்.

Arshath, a Chemical Engineering student in the National University of Singapore, is a Tamil literary debater. Arshath’s interest in the Tamil language started when he won several school-level competitions. He is also a student volunteer who works closely with various community organisations.